4,844 வெளிநாட்டினருக்கு இந்தியக் குடியுரிமை

1 mins read
4880015d-a9ac-4e66-b607-8fba29de69dd
-

புதுடெல்லி: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4,844 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான எண்ணிக்கை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசால் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அவர் இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு 1,773 பேர் இந்திய குடியுரிமை பெற்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை 2020ல் 639 ஆகவும் 2019ல் 987 ஆகவும் இருந்ததாக அவர் தமது பதிலில் சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு 817 பேர் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளனர்.