சொந்த மகளை அனாதை என்று சொல்லி மோசடி: தம்பதி கைது

சொந்த மகளை அனாதை என்று சொல்லி மோசடி: தம்பதி கைது

1 mins read
c0e48c18-a398-433e-8ef1-81523076f8bd
-

திரு­வ­னந்­த­பு­ரம்: திரு­ம­ணம் செய்து­கொள்ள அனா­தைப் பெண் தேவை என்று அப்­துல் ஹாஜி, 26, என்­ப­வர் இணை­யத்­தில் விளம்­ப­ரம் செய்­து­இருந்­தார்.

அதைப் பார்த்த பைஜு நசீர், ராசிதா என்ற தம்­பதி, தங்­கள் சொந்த பெண்­ணின் புகைப்­படத்தைக் காட்டி அந்­தப் பெண் அனாதை என்று சொல்லி பல முறை அப்­துல் ஹாஜி­யி­டம் இருந்து ரூ.11 லட்­சத்தை வாங்­கிச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மணப்­பெண்ணைப் பல முறை கேட்­டும் நேரே காட்­டா­த­தால் சந்­தே­கம் அடைந்த அப்­துல் ஹாஜி காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தார்.

சொந்த பெண்­ணையே அனாதை என்று சொல்லி அந்­தத் தம்­ப­தி­யர் மோச­டி­யில் ஈடு­பட்­டது விசா­ரணை மூலம் தெரி­ய­வந்­ததாக ஊடகத் தகவல்கள் நேற்று தெரிவித்தன.