கேரளாவில் குரங்கு காய்ச்சல்: ரத்தம் கசிந்ததால் சிகிச்சை

கேரளாவில் குரங்கு காய்ச்சல்: ரத்தம் கசிந்ததால் சிகிச்சை

1 mins read
30740f10-b052-423a-95ae-6b332f104b2a
-

வய­நாடு: கேர­ளா­வில், 24 வயது இளை­ஞர் ஒரு­வர் குரங்கு காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. வய­நாடு மாவட்ட மருத்துவ அதி­காரி டாக்டர் சகீனா பல விவ­ரங்­களைத் தெரி­வித்­தார்.

"வய­நாடு மாவட்­டம் திரு­நெல்லி கிரா­மத்­தில் பவல்லி பழங்­கு­டி­யின குடி­யி­ருப்­பில் வசிக்­கும், 24 வயது இளை­ஞ­ருக்­குக் குரங்கு காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது. அவர் மானந்­த­வாடி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

"இந்த காய்ச்­சல் கேர­ளா­வில் பர­வு­வது இதுவே முதல்­முறை. இது வைரஸ் கிருமி தாக்­கத்­தால் ஏற்­படும் ரத்­தக்­க­சிவு நோய். இது டெங்கு காய்ச்­ச­லைப் பரப்­பும் வைரஸ் கிருமி குடும்­பத்­தைச் சேர்ந்த நோய். இது குரங்­கு­களால் பர­வு­கிறது," என்றார் அவர்.