மணக்கோலத்தில் இறந்த மணமகள்; பெற்றோர் புரட்சி

மணக்கோலத்தில் இறந்த மணமகள்; பெற்றோர் புரட்சி

1 mins read
f6e992c3-3289-4e41-8935-e0ee96e0caca
-

பெங்களூரு: கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் மணக்கோலத்தில் மணமகனுடன் விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டிருந்த மணமகள் (படம்) திடீரென மயங்கி விழுந்து இறந்தார். திருமண வீடே அதிர்ச்சிக்குள்ளானது.

இந்நிலையிலும் மூளைச் சாவடைந்த மகளின் முக்கிய உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர் பெற்றோர். கர்நாடக மாநில அமைச்சர் சுதாகர், பெற்றோரைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, அவர்களது இந்த முடிவுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.