உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கோவாவில் கட்சி அமோக வெற்றிபெறும் என்கிறார்
புதுடெல்லி: சட்டமன்றத் தேர்தல் நடக்கும் உத்தரப் பிரதேசம், உத்ரகாண்ட், கோவாவில் 2014ல் வீசியதைப் போல பாஜக அலை மீண்டும் வீசப்போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆரூடம் கூறி இருக்கிறார்.
கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கணிப்பு களையும் முறியடித்து கட்சி உத்தரப் பிரதேசத்தில் 70 இடங்களைப் பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல, இந்தத் தேர்தலிலும் கட்சி இமாலய வெற்றி பெறும் என்றார் அவர். மணிப்பூரில் இருந்தும் நம்பிக்கைமிக்க தகவல் கிடைப்பதாக அவர் இந்தி செய்தி ஒளிவழி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதற்கு முன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த பிரதமர், ஐந்து மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிவித்து இருந்தார். மக்களின் அமோக ஆதரவு தன் கட்சிக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் கருத வில்லை என்று பிரதமர் மோடி காரசாரமாக குறைகூறினார்.
இந்தியாவை ஒரு ஒருங் கிணைந்த நாடாகக்கூட காங்கிரஸ் பார்க்கவில்லை என்று அவர் தெரி வித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் கோவா விடுதலை தொடர்பாக கருத்து கூறியபோது நாட்டின் வரலாறு பற்றி மோடிக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ருத்ராபூர் என்ற நகரில் சனிக்கிழமை இரவு நேரத்தில் பிரசாரம் செய்த பிரதமர், நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் பற்றி எந்தப் புரிதலும் காங்கிரசுக்கு கிடையாது என்று காரசாரமாகச் சாடினார்.
பெரும்பான்மையான மாநிலங் கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டதாகவும் அந்தக் கட்சியை முற்றிலும் ஒடுக்கும் வாய்ப்பாக இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

