கடைசியாக மூன்று ரபேல் விமானங்கள் விரைவில் வரும்

கடைசியாக மூன்று ரபேல் விமானங்கள் விரைவில் வரும்

1 mins read
bda9f81e-ac8d-4bd3-8646-528da8bfc487
-

புதுடெல்லி: பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56,000 கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன்படி பல கட்டங்களாக விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடைசி கட்டமாக மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வரும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.