பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு தகவல்: 20 ஊழியர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு

புது­டெல்லி: ஊழி­யர் வருங்­கால வைப்பு நிதி நிறு­வ­னத்­தைச் (இபி­எஃப்ஓ) சேர்ந்த 20 ஊழி­யர்­கள், லஞ்­சம் பெற்­றுக்­கொண்டு வைப்­பு­ நிதி பய­னீட்­டா­ளர்­கள் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட்டு இருக்­கிறார்­கள் என்று அவர்­கள் மீது மத்­திய குற்­றப் புல­னாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிந்தது.

ஆந்­திர மாநி­லம் குண்­டூர் பகுதி­யில் பேடி­எம், ஃபோன்பே, கூகுள் பே போன்ற தனி­யார் நிறு­வனங்­களுக்கு அவர்­கள் அந்த விவ­ரங்­க­ளைத் தந்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்குப் பய­னீட்டாளர்கள் பற்­றிய தக­வல்­களை இபி­எஃப்ஓ அலு­வ­லக பணி­யா­ளர்­களே அளிப்­பது தொடர்­பாக வெளி­யான புகா­ரின் அடிப்­படையில் செயல்­பட்ட சிபிஐ அதி­கா­ரி­கள், அந்த ஊழி­யர்­கள் தங்­கள் கைபேசி வழி­யாக பல்­வேறு தக­வல்­க­ளைத் தெரி­வித்து இருக்­கி­றார்­கள் என்­பதைத் தாங்­கள் கண்டு­பி­டித்­த­தா­கக் கூறி­னர்.

பய­னீட்டாளர்­கள் பற்­றிய விவ­ரம், அவர்­க­ளுக்கு அனுப்­பப்­படும் ஓடிபி எனப்­படும் ஒரு­முறை பயன்­படுத்­தப்­படும் ரக­சிய எண் உள்ளிட்ட விவ­ரங்­களை அவர்­கள் தனி­யார் ஆலோ­ச­கர்­க­ளுக்கு பகிர்ந்­து உள்­ள­தும் தெரி­ய­வந்­தது.

இந்­தத் தக­வல்­க­ளைக் கொண்டு தனி­யார் அமைப்­பு­கள் ஊழி­யர்­கள் வருங்­கால வைப்பு நிதி நிறு­வ­னத்­தின் அதி­கா­ர­பூர்வ செயல்­பா­டு­க­ளைப்­போல செயல்­பட்­டுள்­ள­தும் விசா­ர­ணை­யில் கண்டுபி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பய­னீட்டாளர்­கள் பற்றிய தக­வல்­களை அளிப்­ப­தற்கு ஊழி­யர்கள் லஞ்­சம் பெற்­ற­தும் விசா­ரணை­யில் தெரி­ய­வந்­தது.

கைபே­சிச் செயலி மூல­மாக பய­னீட்டாளர்­களுக்கு அனுப்பப்­பட்ட தக­வல்களை இந்த ஊழியர் கள் தங்­க­ளது கைபேசி­யில் பட­மெ­டுத்து அதை நிறு­வ­னங்­களுக்குப் பகிர்ந்­துள்­ள­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

மும்பை அலு­வ­ல­கத்­தில் 2021 டிசம்­பர் 30ஆம் தேதி 712 போலி ஆவ­ணங்­கள் மூலம்­ வருங்­கால வைப்பு நிதியை அந்­த­ அலுவலக ஊழி­யர்­களே பெற்­றுள்­ள­தாக புகார் எழுந்­தது. இத­னால் ஏற்­பட்ட இழப்பு ரூ.18.97 கோடி­யா­கும். இது குறித்தும் சிபிஐ விசா­ரணை நடத்தி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!