இன்று தேர்தல்
உத்தரகாண்ட்: உத்தர காண்ட், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
செல்ஃபி எடுத்த
இருவர் பலி
கோல்கத்தா: மேற்கு வங்காளம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற சுற்றுலாப் பகுதிக்குச் சென்ற இளையர்கள், அப் பகுதி ரயில்பாதை தண்டவாளத்தில் நின்றபடி செல்ஃபி படம் எடுத்தனர்.
அப்போது மெகுனிபூரில் இருந்து ஹவுராவுக்கு வேகமாக சென்ற ரயில் அவர்கள் மீது மோதியதில் இரண்டு பேர் மரண மடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
விண்ணுக்கு இன்று செல்லும்
அமராவதி: பூமியைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-04 என்ற செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஷ் தவான் தளத்தில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு செயற்கைக் கோள் ஏவப்படும்.
மண் சரிவில் சிக்கியோரை மீட்க முயற்சி
போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாதாள கால்வாய் கட்டுமான பணி நடந்தபோது மண் சரிவு ஏற்பட்டு ஒன்பது தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதுவரை ஏழு தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 பேரின் கதி தெரியவில்லை என்று நேற்று அதிகாரிகள் தெரி வித்தனர். அவர்களை மீட்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன.
இந்தச் சம்பவம் காட்னி என்ற மாவட்டத்தில் சிலிமானாபாத் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
மீட்புப் பணிகளில் உள்ளுர் அதிகாரிகளும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.

