பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பர்தா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளைச் சுற்றி நேற்று காலை
6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடப்பில் உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அறிவிப்பை அடுத்து கர்நாடகாவில் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று முதல் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டன.

