திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த சுபீஷுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று கல்லீரல் பொருத்தினால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அரசு மருத்துவமனையில் இல வசமாக அறுவை சிகிச்சை செய்வார்கள் என்றாலும் கல்லீரலை யாரிடம் இருந்து தானமாகப் பெறுவது என்று சுபீஷும் அவரது மனைவி பிரவிஜாவும் மனம் கலங்கி நின்றனர். அப்போது காதல் கணவருக்குத் தாமே கல்லீரல் தானம் வழங்க முன்வந்தார் பிரவிஜா. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அவரது கல்லீரல் சுபீஷக்குப் பொருந்தும் என்பது உறுதியானது.
இந்நிலையில், அன்பர் தினத்தன்று சுபீஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் 18 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது பிரவிஜாவின் இடதுபக்க கல்லீரலில் இருந்து ஒரு பகுதி எடுக்கப்பட்டு, சுபீஷுக்குப் பொருத்தப்பட்டது.

