செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c2d5f688-d5ce-4288-b8f4-460a86ceebf8
-

ஜி-20 செய­ல­கம் அமைக்க ஒப்­பு­தல்

புது­டெல்லி: அனைத்­து­ல­கப் பொரு­ளா­தா­ரம் தொடர்­பான முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண 20 நாடு­கள் அடங்­கிய ஜி-20 அமைப்பு செயல்­ப­டு­கிறது. இந்த அமைப்­பிற்­கு ­ஒவ்­வொரு நாடும் சுழற்சி முறை­யில் தலைமை வகித்து வரு­கின்­றன. வரு­கிற டிசம்­பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்­பர் 30ஆம் தேதி­வரை இந்­தியா தலைமை வகிக்க உள்­ளது. இந்­நி­லை­யில், ஜி-20 அமைப்­புக்கு இந்­தியா தலைமை ஏற்க தேவை­யான ஏற்­பா­டு­க­ளுக்கு மத்­திய அமைச்­ச­ரவை ஒப்புத்­தல் அளித்­துள்­ளது.

பிளாஸ்­டிக் கேனில் சிக்­கிய புலி­யின் தலை

மும்பை: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் தானே மாவட்­டத்­தில் உள்ள பத்­லா­பூர் சிற்­றூர் அருகே பிளாஸ்­டிக் தண்­ணீர் கேனில் தலை சிக்­கிய நிலை­யில் புலி ஒன்று காணப்­பட்­டது. தண்­ணீர் குடிப்­ப­தற்­காக அதற்­குள் தலை­யை­விட்ட புலிக்கு, மீண்­டும் தலையை வெளி­யில் எடுக்­க­மு­டி­ய­வில்லை. அவ்­வ­ழியே சென்ற ஒரு­வர், அந்­தப் புலி­யைக் காணொ­ளி­யா­கப் பதி­வு­செய்து தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்­பி­வைத்­தார். அந்த அதி­கா­ரி­கள் அந்­தச் சிற்­றூர் மக்­க­ளின் உத­வி­யு­டன் காட்­டுக்­குள் ஓடிப்­போன புலி­யைக் கண்­டு­பி­டித்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தி அதன் தலை­யில் மாட்­டி­யி­ருந்த பிளாஸ்­டிக் கேனை எடுத்து அதனை காட்டுக்குள் விடு­வித்­த­னர்.

கலா­சா­ரத்­திற்­கேற்ப ஊர் பெயர்­கள்

மும்பை: வ­ட­கி­ழக்கு மாநி­லத்­தின் கலா­சா­ரம், மர­பு­க­ளுக்கு ஏற்ப மாநி­லத்­தில் நக­ரங்­கள், ஊர்­கள், இடங்­க­ளின் பெயர்­கள் மாற்­றப்­பட உள்­ள­தாக அசாம் முதல்­வர் ஹிமந்த பிஸ்வ சர்மா புதன்­கி­ழமை அறி­வித்­தார். இது­கு­றித்து அவர், தனது டுவிட்­டர் பதி­வில், "ஒரு பெய­ரில் நிறைய இருக்­கிறது. ஒரு நக­ரம், கிரா­மத்­தின் பெயர் அதன் கலா­சா­ரம், பாரம்­ப­ரி­யம் மற்­றும் நாக­ரி­கத்­தைப் பிர­தி­ப­லிக்க வேண்­டும்," என்று பதி­விட்­டுள்­ளார். மக்­க­ளின் பெயர் பரிந்­து­ரை­யைக் கேட்­ப­தற்­கென தனி ஒரு இணை­ய­த்த­ளம் நேற்று தொடங்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக செவ்­வாய்க்­கி­ழமை கவு­காத்­தி­யில் மருத்­து­வக் கல்­லூரி நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசிய முதல்­வர், "கல­பார் உள்­ளிட்ட சில இடங்­கள், மாநி­லம் முழு­வ­தும் உள்ள பிற நக­ரங்­கள் மற்­றும் கிரா­மங்­க­ளின் பெயர்­கள் மாற்­றப்­படும். ஏனெ­னில் சில பெயர்­கள் மக்­கள் உச்­ச­ரிக்க வச­தி­யாக இல்லை. சில சமூ­கங்­களை இழி­வு­ப­டுத்­து­வ­ன­வாக உள்­ளன. அவை மாற்­றப்­பட வேண்­டும்," என்று கூறி­னார். 2021 செப்­டம்­ப­ரில், அசா­மில் உள்ள ராஜீவ் காந்தி தேசி­யப் பூங்­கா­வின் பெயரை மாற்­றக்­கோரி தேயி­லைத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் வலி­யு­றுத்­தி­யதை அடுத்து, 'ஒராங் தேசி­யப் பூங்கா' என்று பெயர் மாற்­றம் செய்யப்­பட்­டது.