புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீடு டெல்லியில் ஜன்பாத் சாலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்றுக் காலை அவருடைய வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார். அவர் வந்த வாகனத்தை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

