மாற்றுத் திறனாளிகள் நிறைந்த காஷ்மீர் கிராமம்

மாற்றுத் திறனாளிகள் நிறைந்த காஷ்மீர் கிராமம்

1 mins read
25a03abb-3483-4941-b319-bf2bfa1a757b
-

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரின் தோடா மாவட்டத்­தில் உள்ள, தாதாகி மலைக் கிரா­மத்­தில் வசிக்­கும் சரி­பா­திக் குடும்­பங்­களில் குறைந்­த­பட்­சம் ஒரு குழந்­தை­யா­வது காது கேளாத, வாய் பேச முடி­யாத நிலை­யில் பிறக்­கின்­றன.

அக்­கி­ரா­மத்­தில் இப்­போது 105 குடும்­பங்­கள் உள்­ளன. இதில் 55 குடும்­பங்­களில் 78 மாற்­றுத் திறனா­ளி­கள் உள்­ள­னர்.

இவர்களில் 41 பேர் பெண்கள், 30 பேர் குழந்தைகள். இதற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், இந்­தக் கிரா­மத்தை ராணு­வத்­தி­னர் தத்­தெடுத்து மாற்­றுத் திற­னா­ளி­களுக்­குப் பல்­வேறு பயிற்­சி­களை அளித்து வரு­கின்­றனர்.

மேலும், பத்து குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளையும் வழங்கி உள்ளனர்.