அகமதாபாத் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு தூக்குத்தண்டனை

11 பேருக்கு ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அக­ம­தாபாத்: அக­ம­தா­பாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்­சாட்­டப்­பட்ட 49 பேரும் குற்­ற­வா­ளி­கள் எனத் தீர்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

38 பேருக்கு தூக்­குத் தண்டனை­யும் 11 பேருக்கு ஆயுள் தண்­ட­னை­யும் விதிப்­ப­தாக இந்த வழக்கை விசா­ரித்த அக­ம­தா­பாத் சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி ஏ.ஆா்.படேல் நேற்று தீர்ப்­ப­ளித்­தார்.

குஜ­ராத் மாநி­லத்­தில் உள்ள அக­ம­தா­பாத் நக­ரில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்­தது. நக­ரின் 21 முக்­கிய இடங்­களில் அடுத்­த­டுத்து குண்­டு­கள் வெடித்­துச் சித­றின.

மொத்­தம் 70 நிமி­டங்­க­ளுக்­குள் இந்தத் தொடர் குண்டு வெடிப்­புச் சம்­ப­வம் நிகழ்ந்து முடிந்­தது. இதில் 56 அப்­பாவி மக்­கள் பலி­யா­கி­னர். இரு­நூ­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் படு­கா­யம் அடைந்­த­னர். பெரும் பொருள்சே­த­மும் ஏற்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்த அதிர்ச்­சி­யில் இருந்து நாட்டு மக்­கள் மீள்­வ­தற்­குள் குஜ­ராத்­தின் மற்­றொரு முக்­கிய நக­ர­மான சூரத்­தி­லும் பல்­வேறு இடங்­களில் தீவி­ர­வா­தி­கள் நாச செயல்­க­ளுக்­காக வைத்­தி­ருந்த வெடி­குண்­டு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இது தொடர்­பாக மொத்­தம் 35 வழக்­கு­கள் பதிவு செய்­யப்பட்டு, அவை அனைத்­தை­யும் அகமதாபாத் சிறப்பு நீதி­மன்­றம் ஒன்று சேர்த்து, ஒரே வழக்­காக விசா­ரித்து வந்­தது.

கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் தொடங்­கிய விசா­ரணை பல ஆண்­டு­க­ளாக நீடித்­தது. கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் விசா­ரணை நிறை­வ­டைந்த­தாக சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி ஏ.ஆர்.படேல் அறி­வித்­தார்.

அதை­ய­டுத்து நான்கு மாதங்­களுக்­குப் பின்­னர் அவர் நேற்று இந்த வழக்­கில் தீர்ப்பு வழங்­கி­னார்.

மொத்­தம் 78 பேர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. ஒரு­வர் அர­சுத்­த­ரப்பு சாட்­சி­யாக மாறி­யதை அடுத்து மற்­ற­வர்­கள் மீதான குற்றச்­சாட்­டு­கள் விசா­ரிக்­கப்­பட்­டன.

அதன் முடி­வில் 49 பேர் குற்­ற­வா­ளி­கள் என அறி­விக்­கப்­பட்­ட­னர். மற்ற 28 பேரும் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், 38 பேருக்கு தூக்குத் தண்­ட­னை­யும் 11 பேருக்கு ஆயுள் தண்­ட­னை­யும் விதித்து நீதி­பதி ஏ.ஆர்.படேல் நேற்று தீர்ப்பு அளித்­தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்­தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்­புச் சம்­ப­வத்­துக்­குப் பின்­னர் பெரும் வன்­முறை வெடித்­தது. அதற்­குப் பழி தீர்க்­கு­ம் வித­மாக இந்தி­யன் முஜா­ஹி­தீன், சிமி ஆகிய இரு இயக்­கத்­தி­னர் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்­புச் சம்­ப­வத்தை நிகழ்த்­தி­ய­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இது தொடர்­பாக கைதா­ன­வர்­கள் இந்த இயக்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் கூறப்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!