பேச்சுவார்த்தைக்கு வருமாறு மம்தாவுக்கு ஆளுநர் அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மம்தாவுக்கு ஆளுநர் அழைப்பு

2 mins read
99ecf181-0e82-4ab4-9196-837c857843cc
ஆளுநர் ஜெகதீப் தங்கர், முதல்வர் மம்தா. படங்கள்: ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தின் நலன் கருதி, தாம் எழுப்­பிய பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு முதல்­வர் மம்தா பானர்ஜி உரிய பதில்­களை அளிக்­க­வில்லை என அம்­மா­நில ஆளு­நர் ஜெக­தீப் தங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது நில­வும் முட்­டுக்­கட்­டைக்குத் தீர்வு காணும் வகை­யில் பேச்­சு­வார்த்தை நடத்த தாம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு முன்­வர வேண்­டும் என்­றும் ஆளு­நர் தமது டுவிட்­டர் பதிவில் குறிப்­பிட்டுள்ளார்.

அர­சி­யல் சட்­டத்­தின்­படி, பதவி வகிக்­கும் ஆளு­ந­ருக்­கும் மாநில முதல்­வ­ருக்­கும் இடையே பேச்சு­வார்த்­தை­யும் ஆலோ­ச­னை­யும் நடை­பெ­று­வது ஜன­நா­ய­கத்­துக்கு நல்­லது என்று குறிப்­பிட்­டுள்ள ஆளு­நர் ஜெக­தீப் தங்­கர், அரசியல் சட்ட ஆட்­சி ­மு­றை­யில் இது பிரிக்க இய­லாத ஓர் அங்­கம் எனக் கூறி­உள்­ளார்.

"இந்­தத் திசையை நோக்கி நான் மேற்­கொண்ட முயற்­சி­கள் அனைத்­தும் தங்­க­ளது நிலைப்­பாட்­டால் பலன் அளிக்­க­வில்லை. இத்­த­கைய போக்கு, அர­சி­யல் சட்­டச் சிக்­க­லுக்கு வழி­வ­குத்து விடும். அதை தவிர்ப்­ப­தற்­குத்­தான் நாம் உறு­தி­மொழி எடுத்­துள்­ளோம்.

"நான் எழுப்­பிய பல பிரச்­சினை­க­ளுக்கு நீண்ட கால­மாக நீங்­கள் பதில் அளிக்­க­வில்லை. அர­சி­யல் சட்­டத்­தின் 167வது பிரி­வின்­படி, தக­வல் அளிக்க வேண்டி­யது முதல்­வ­ரின் கடமை ஆகும். மேலும், கவலை அளிக்­கக்­கூ­டிய வேறு சில அம்­சங்­களும் உள்­ளன," என்று ஆளு­நர் ஜெக­தீப் தங்­கர் தமது டுவிட்­டர் பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, முதல்­வர் மம்தா பானர்ஜி எந்த நேரத்­தி­லும் பேச்சு­வார்த்­தைக்­காக ஆளு­நர் மாளி­கைக்கு வர­லாம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், முட்­டுக்­கட்­டைக்குத் தீர்வு காண பேச்­சு­வார்த்தை உதவும் எனக் கூறி­யுள்­ளார். மேற்கு வங்க ஆளு­நர் தமது தலை­மை­யி­லான அர­சின் செயல்­பா­டு­களில் குறுக்­கி­டு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி புகார் எழுப்­பி­யுள்­ளார். ஆனால் மாநில நலன்­களை முன்­வைத்து தாம் செயல்­ப­டு­வ­தாக ஆளு­நர் கூறி வரு­கி­றார். இத­னால் இரு தரப்­புக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நிலவி வரு­கிறது.