ரஷ்யா, உக்ரேன் இடையே பேச்சு: இந்தியா வலியுறுத்து

ரஷ்யா, உக்ரேன் இடையே பேச்சு: இந்தியா வலியுறுத்து

1 mins read
0883738f-7075-4b83-8575-407670b5c3ca
திருமூர்த்தி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடையே போர் பதற்­றம் நிலவி வரும் நிலை­யில், இரு நாடு­களும் பேச்­சு­வார்த்தை நடத்த முன்­வர வேண்­டும் என இந்­தியா வலி­யு­றுத்தி உள்­ளது.

போர் பதற்­றத்தைத் தணிக்க மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களுக்கு இந்­தியா முழு ஆத­ரவு அளிக்­கும் என ஐநா­வுக்­கான இந்­தி­யா­வின் நிரந்­தர பிர­தி­நிதி டி.எஸ்.திரு­மூர்த்தி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நியூ­யார்க்­கில் நடை­பெற்ற ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு பேசிய அவர், இரு நாடு­க­ளுக்­கும் இடையே நிலவும் பதற்­றத்தை தணிப்­ப­தற்­கான தீர்­வைக் கண்­ட­றி­வ­தில் இந்தியா மிகுந்த ஆர்­வம் கொண்­டிருப்பதாகக் குறிப்­பிட்­டார்.

அமை­தி­யான, ஆக்­க­பூர்­வ­மான, தூத­ரக அள­வி­லான பேச்சு­ வார்த்தை­கள் தேவை என்­றும் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் அனைத்து தரப்­பி­ன­ரு­ட­னும் இந்­தியா தொடர்­பில் உள்­ளது என்­றும் திரு­மூர்த்தி தெரி­வித்­தார்.

பேச்­சு­வார்த்தை மூலம் மட்டுமே பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்­ப­து­தான் இந்­தி­யா­வின் கருத்­தும் நிலைப்­பா­டும் ஆகும் என்று குறிப்­பிட்ட அவர், உக்­ரே­னில் ஏரா­ள­மான இந்­திய மாண­வர்­கள் இருப்­ப­தா­க­வும் அவர்­களின் பாது­காப்­புக்கு இந்­தியா முன்­னு­ரிமை அளிக்­கும் என்­றும் கூறி­னார்.

"அனைத்து நாடு­க­ளின் சட்­ட­பூர்வ பாது­காப்பு, நலன்களைக் கருத்­தில் கொண்டு, வட்­டார அள­வி­லும் அதற்கு அப்­பா­லும் நீண்ட கால அமைதி என்­பது பாது­காக்­கப்­பட வேண்­டும். இதை நோக்­க­மா­கக் கொண்டு பதற்­றத்தை உடனே தணிக்­கக்­கூ­டிய ஒரு தீர்வைக் கண்­டு­பி­டிக்க வேண்­டும்," என்று திரு­மூர்த்தி மேலும் தெரி­வித்­தார்.