சென்னை: 'தமிழ்த் தாத்தா' என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் நேற்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி அவரது பிறந்தநாளை நினைவுகூர்ந்து, அவரது அரும்பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.
"தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர். சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், இளம் தலைமுறையினர் அவரது ஒப்பற்ற படைப்புகளை வாசிக்க வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

