கௌஹாத்தி: ஆடவர் ஒருவர், 22,000 ரூபாயையும் சில்லறைக் காசுகளாகக் கொடுத்து, இருசக்கர வாகனம் வாங்கிச் சென்ற சம்பவம் அசாம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பார்பேட்டா நகர காய்கறி வணிகரான ஹஃபிசுருக்கு மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என வெகுநாளாக ஆசை. "ஆனால், விலை அதிகம் என்பதால் அவ்வளவு பணத்தையும் சேர்க்க நீண்ட நாளாகிவிட்டது. ஓராண்டாக சில்லறைக் காசுகளாகச் சேர்த்தபின், இருசக்கர வாகன விற்பனை நிலையம் ஒன்றை அணுகினேன். என்னிடமிருந்த சில்லறைக் காசுகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டனர்," என்றார் ஹஃபிசுர். ஒரு சாக்குமூட்டை முழுக்க இருந்த சில்லறைக் காசுகளை எண்ணி முடிக்க மூன்று மணி நேரம் ஆனது. படம்: ஏஎன்ஐ
மோட்டார்சைக்கிள் வாங்க மூட்டை நிறைய சில்லறைக் காசுடன் வந்தார்
1 mins read
-

