மணமகன் உட்பட 9 பேர் கார் விபத்தில் பலி

மணமகன் உட்பட 9 பேர் கார் விபத்தில் பலி

1 mins read
fed00dbc-4b2f-4914-8df1-d701edcc1c03
படம்: இந்திய ஊடகம் -

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் மணமகன் உட்பட 9 பேர் மாண்டனர்.

உஜ்ஜயினியில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.

வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது என காவல் துறை தெரிவித்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையும், மீட்பு குழுவும் ஆற்றில் மூழ்கிய காரையும் ஒன்பது சடலங்களையும் மீட்டனர்.

சுமார் ஒன்பது அடி ஆழத்திலிருந்து கார் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.