திருவனந்தபுரம்: கேரளா வில் அரசுப் பேருந்தில் செல்லும் பயணிகள் கைப்பேசியில் உரக்கப் பேசுவதற்கும் பாடல்கள் கேட்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அனைத்துப் பேருந்துகளிலும் உள்ள தகவல் பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருசிலரது செயல்பாடு களால் மற்ற பயணிகளுக்கு தொல்லை ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

