மம்தா பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்

கோல்­கத்தா: மேற்கு வங்க ஆளுநருக்­கும் அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்­ஜிக்­கும் இடை­யே­யான மோதல் பெரி­தாகி வரு­கிறது. இந்­நி­லை­யில், சட்­டப்­பே­ர­வை­யைக் கூட்­டும்­படி முதல்­வர் மம்தா முன்­வைத்த பரிந்­து­ரையை ஆளு­நர் ஜெக­தீப் தங்­கார் நிரா­க­ரித்­துள்­ளார். இத­னால் அம்­மா­நில அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்பு நில­வு­கிறது.

முதல்­வர் மம்தா தலை­மை­யி­லான திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் அண்­மைக்­கா­ல­மாக சல­ச­லப்பு நிலவி வரு­கிறது.

உட்­கட்­சிப் பூசல் பெரி­தா­ன­தை­யடுத்து, சட்­டப்­பே­ர­வையை தற்­கா­லி­க­மாக முடக்கி வைக்­கு­மாறு ஆளு­ந­ரைக் கேட்­டுக்கொண்­டார் முதல்­வர் மம்தா. அதை ஏற்று பேர­வையை முடக்கி உத்­த­ர­விட்­டார் ஆளு­நர்.

இந்­நி­லை­யில், எதிர்­வ­ரும் மார்ச் 7ஆம் தேதி பேர­வையை மீண்­டும் கூட்­டு­மாறு முதல்­வர் அலு­வ­ல­கத்­தில் இருந்து ஆளு­ந­ருக்கு பரிந்­து­ரைக் கடி­தம் அனுப்­பப்­பட்­டது. ஆனால் இம்­முறை மம்­தா­வின் பரிந்­துரை ஏற்­கப்­ப­ட­வில்லை.

சட்­டப்­பே­ர­வையை கூட்­டு­வதற்கு மாநில அமைச்­ச­ரவைதான் பரிந்­து­ரைக்க வேண்­டும் என்­றும் மார்ச் 7ம் தேதி சட்­டப்­பே­ர­வையை கூட்­டும்­படி முதல்­வர் பரிந்­துரை செய்­தி­ருப்­பதை அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தின்­படி ஏற்க இய­லாது என்­றும் ஆளு­நர் தரப்­பில் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனவே, அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­துக்­குட்­பட்டு முதல்­வ­ரின் பரிந்­துரைக் கடி­த­மும் கோப்­பு­களும் திருப்பி அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஆளு­நர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!