'எல்லை நிலையே உறவைத் தீர்மானிக்கும்'

1 mins read
5f4fe4dc-d26e-44a0-b660-a82b6dccc2c8
-

புது­டெல்லி: இரு நாடு­க­ளின் எல்­லை­யில் உள்ள நில­வ­ரத்­தைப் பொறுத்தே இந்­தியா, சீனா இடை­யே­யான உறவு தீர்­மா­னிக்­கப்­ப­டு­வதாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

ஜெர்­ம­னி­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், எல்­லைப் பிரச்­சினை தொடர்­பாக செய்து கொண்ட ஒப்­பந்­தங்­களை சீனா பல­முறை மீறி­விட்­ட­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"கடந்த 45 ஆண்­டு­க­ளாக இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான எல்லை நிர்­வா­கம் நிலை­யா­ன­தாக இருந்­தது. 1975 முதல் எல்­லை­யில் உயி­ரி­ழப்­பு­கள் ஏதும் இல்லை.

"எல்­லை­யில் படை­கள் குவிக்­கப்­ப­டக்­கூ­டாது என்று ஒப்­பந்­தம் செய்துகொண்­டோம். ஆனால் சீனா அதை மீறி­யது.

"எல்­லை­யின் நிலை­தான் உற­வின் நிலை­யைத் தீர்­மா­னிக்­கும் என்­பது இயற்­கை­யா­னது.

"சீனா உட­னான உறவு தற்­போது கடி­ன­மான கட்­டத்­தில் உள்­ளது. இந்­தி­யா­வு­ட­னான எழுத்­து­பூர்வ ஒப்­பந்­தங்­களை கடந்த 2020ஆம் ஆண்டு சீனா புறக்­க­ணித்­தது," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.