விரைவில் 12 முதல் 15 வயது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி

விரைவில் 12 முதல் 15 வயது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி

2 mins read
d034dec9-b206-4dbb-802c-69c5d4809a97
-

புது­டெல்லி: 12 முதல் 15 வய­திற்குட்­பட்ட பிள்­ளை­க­ளுக்குக் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக 'கோர்­பே­வேக்ஸ்' தடுப்­பூசி போட இந்­திய மருந்து கட்­டுப்­பாட்டு அமைப்பு அவ­ச­ர­கால அனு­மதி அளித்­துள்­ளது.

சில நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு அளிக்­கப்­பட்­டுள்ள இந்த அனு­ம­தி­யைத் தொடர்ந்து, தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன் குறித்து வல்­லு­நர் குழு ஆய்வு செய்து, 12-15 வயது வரை உள்­ள­வர்­க­ளுக்­குப் போட­லாம் என பரிந்­துரை செய்துள்ளது.

இருப்­பி­னும் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்குத் தடுப்­பூசி போடு­வது குறித்து இன்­னும் முடிவு எடுக்­க­வில்லை என்று மத்­திய சுகா­தார அமைச்­ச­கம் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐத­ரா­பாத்­தைச் சேர்ந்த பயா­ல­ஜிக்­கல்-இ நிறு­வ­னம், அமெ­ரிக்­கா­வின் டெக்­சாஸ் மாநி­லத்­தைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து இந்த தடுப்­பூ­சியை உள்­நாட்டு தொழில்­நுட்­பத்­தில் உரு­வாக்­கி­யுள்­ளது.

கோர்­பே­வேக்ஸ் தடுப்­பூசி கொரோனா கிரு­மி­யில் உள்ள ஸ்பைக் புரோட்­டின் கொண்டு தயா­ரிக்­கப்­பட்­ட­தா­கும்.

28 நாள்­கள் இடை­வெ­ளி­யில் 2 டோஸ்­கள் போடும் வகை­யில் கோர்­பே­வேக்ஸ் தடுப்­பூசி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வய­தி­ன­ருக்கு ஏற்­கெ­னவே கோவேக்­சின், ஸைகோவ்-டி என இரண்டு தடுப்­பூ­சி­க­ளுக்கு அவ­ச­ர­கால அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், புதிய தடுப்பூசிக்கு ஒப்­பு­தல் அளித்­தது நாட்­டில் சிறார்­களுக்­கான தடுப்­பூசி திட்­டத்தை விரி­வு­ப­டுத்த உத­வும் என மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தியா முழு­வ­தும் கொரோனா தொற்­றுக்கு எதிராக கோவாக்­சின், கோவி­ஷீல்டு ஆகிய தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரு­கின்­றன.

15 முதல் 17 வயது பிள்­ளை­களில் 76 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்ட நிலை­யில், தற்­போது கூடு­தல் தடுப்­பூசி செலுத்­தப்­பட்டு வரு­கிறது.