உயிரிழப்போர் விகிதம் குறைந்தது

உயிரிழப்போர் விகிதம் குறைந்தது

1 mins read
baebbc61-7e40-4f40-93fa-88fa314a83b2
-

புதுடெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானால் ஏற்பட்ட கிருமிப் பரவலின் 3வது அலை முடிவுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய அலை படிப்படியாக குறைந்து மார்ச் மாத இறுதியில் முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இறப்பு,

புதிய தொற்றுச் சம்பவங்கள் பாதியாக குறைந்துள்ளது.

கடந்த 14 முதல் 20ஆம் தேதி வரை தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு 1,898ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 3,366ஆக இருந்தது. ஒரு வாரத்தில் 44 விழுக்காடு குறைந்துள்ளது.

அதேபோல், புதிதாக தொற் றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 4வது வாரமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1.73 லட்சம் பேரைக் கிருமி தொற்றியது. இது அதற்கு முந்திய வாரத்தில் 3.94 லட்சமாக இருந்தது. தற்போது 2.15 லட்சம் பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

இதன் மூலம் நாட்டில் 3வது அலை எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே முடிவுக்கு வரும் என்று தெரிவதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.