பஜ்ரங் தள் நிர்வாகி கொலை தொடர்பில் மூவர் கைது

பஜ்ரங் தள் நிர்வாகி கொலை தொடர்பில் மூவர் கைது

1 mins read
0ee04602-6d4b-40c9-b6c1-57fd329371a3
ஹர்ஜாவின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசினர். படம்: இணையம் -

‌ஷிவ­மொகா: கர்­நா­டகா மாநி­லம் ஷிவமொ­கா­வில் பஜ்­ரங் தள் பிர­மு­கர் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் அறுவர் கைது செய்­யப்பட்டுள்­ள­னர். காவல்­து­றை­யி­னர் 12 பேரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

கைதானவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் போலிசார் கூறினர்.

இத­னி­டையே, ஹிஜாப் விவ­கா­ரம் உள்­பட அனைத்து கோணங்­க­ளி­லும் இந்த கொலை வழக்­கில் விசா­ரணை நடப்­ப­தாக கர்­நா­டக உள்­துறை அமைச்­சர் ஞானேந்­திரா தெரி­வித்­துள்­ளார்.

"ஹிஜாப் சர்ச்­சைக்கு பின்­பு­லத்­தில் உள்ள அமைப்­பு­க­ளுக்கு இந்த கொலை­யில் தொடர்பு உள்­ளதா? என விசா­ரணை நடை­பெ­று­கிறது. கல் வீச்சு சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் மீது சட்ட ரீதி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்­றார்.

கர்­நா­டக மாநி­லம் ‌ஷிவ­மொகா டவுன் சீகே­ஹட்டி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஹர்ஷா என்ற 25 வயது பஜ்­ரங் தள் பிர­மு­கர் திங்­கட்­கி­ழமை இரவு கொல்­லப்­பட்­டார். இதைத் தொடர்ந்து இரு­த­ரப்­பி­னர் இடையே மோதல் ஏற்­பட்­டது.

இதற்­கி­டையே, ஹர்­ஜா­வின் இறுதி ஊர்­வ­லத்­தில் 5,000 பேர் கலந்துகொண்டனர்.

அப்­போது ஏற்பட்ட வன்முறையில் சாலை­யோ­ரம் நின்ற வாக­னங்­கள் அடித்து நொறுக்கி சேதப்­படுத்தப்பட்டன. கல்­வீச்­சில் 2 பேர் காய­ம­டைந்­த­னர். இந்த வன்­முறை சம்­ப­வங்­க­ளால் பதற்­றம் நில­வி­யது. 144 தடை உத்­த­ரவு வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.