லஞ்சம் வாங்கியவர்களுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு

லஞ்சம் வாங்கியவர்களுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு

1 mins read
d08cf254-93f7-42f3-9135-102d5a9f39dd
-

புவனேஸ்வர்: ஒடி­சா­வில் உயர் போலிஸ் அதி­காரி உட்­பட லஞ்­சம், ஊழல் விவ­கா­ரங்­களில் சிக்­கிய அரசு அதி­கா­ரி­க­ளுக்­குக் கட்­டாய ஓய்வு அளிக்­கப்­பட்டு அதி­ரடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட கூடு­தல் காவல் கண்­கா­ணிப்­பா­ளர் திரி­நாத் மிஸ்ரா, ஏறத்­தாழ ஒன்­பது கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­துக்­க­ளைச் சேர்த்­த­தா­க­வும், தனது வரு­வாயை மீறி சொத்­துக்­கு­விப்பு செய்­த­தா­க­வும் குற்­றம் சாட்­டப்­பட்டு லஞ்ச ஒழிப்பு துறை­யால் அண்­மை­யில் கைது செய்­யப்­பட்­டார்.

இதன் மூலம், 2019 முதல் ஒடி­சா­வில் கட்­டாய ஓய்வு அளிக்­கப்­பட்ட அதி­கா­ரி­க­ளின் எண்­ணிக்கை 152 ஆக உயர்ந்­துள்­ளது. இம்­மா­தம் 16ஆம் தேதி­யன்று ஊழல், திற­மை­யின்மை குற்­றம் சாட்­டப்­பட்ட ஐவ­ருக்கு மாநில அரசு கட்­டாய ஓய்வு கொடுத்­தது.

ஆனால் இவர்­க­ளுக்­கான, ஓய்­வுக்­குப் பிந்­திய நிதி ஆதா­ரங்­க­ளை­யும் பிடுங்க வேண்­டும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற

­னர்.