திருவனந்தபுரம்: கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் முதல்வர் பினராய் விஜயன் (படம்) தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை ஆராயும் நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையிலான குழு முன், அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தைச் சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.
அத்துடன் ஆளுநர்கள் நியமனத்திற்கு முன் மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரளா பரிந்துரைத்துள்ளது.

