இந்தியா வலிமை பெறும்: முகேஷ்

இந்தியா வலிமை பெறும்: முகேஷ்

1 mins read
d38a7e5e-3f81-4fe4-ba39-e10293757e6e
-

புது­டில்லி: தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­கள், இந்­தி­யாவை புதிய எரி­சக்­திக்­கான தலைமை நாடாக மாற்­றும் என்று உல­கப் பணக்­கா­ரர் களில் ஒரு­வ­ரும் தொழில் அதி­ப­ரு­மான முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

"தற்­போதைய தொழில்­நுட்ப மாற்றங்­கள், புதிய எரி­சக்­திக்­கான முன்­னணி நாடாக இந்­தி­யாவை மாற்­றும். ஒரே இர­வில் அது, நடந்­து ­வி­டாது. நிலக்­கரி, இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கச்சா எண்­ணெய்யை இன்­னும் இருபது ஆண்டுகள் சார்ந்திருக்கும் நிலையே உள்ளது. இன்னும் 20 ஆண்டு­களில் இவற்றை சார்ந்­தி­ருக்­கும் நிலை­யி­ல்­இருந்து வெளி­யேற வேண்­டும். அப்­போது தூய்மை­யான எரி­சக்தியை ஏற்­று­மதி செய்­யும் நாடாக இந்­தியா உரு­வா­கும். கடந்த 20 ஆண்டுகள் தகவல், தொழில் நுட்பத்தில் 'சூப்பர் பவர்' நாடாக இருந்த இந்தியா, அடுத்த இருபது ஆண்டுகளில் எரிசக்தி, உயிர்அறிவியலில் 'சூப்பர் பவர்' நாடாக மாறும். இதில் எனக்குச் சந்தேகமில்லை," என்று முகேஷ் கூறினார்.