'இந்தியா தலையிட வேண்டும்'

'இந்தியா தலையிட வேண்டும்'

2 mins read
46b923a0-a8de-4a71-bd54-28f84f9aa1a2
-

புட்டினிடம் பிரதமர் மோடி பேச வேண்டும் என உக்ரேன் தூதரகம் வலியுறுத்து

புது­டெல்லி: உக்­ரே­னில் உள்ள ராணு­வத் தளங்­கள், விமானத் தளங்­கள் மீது ரஷ்யப் படை­கள் தொடர்ந்து தாக்­கு­தலை நடத்தி வரு­கின்­றன.

குறிப்­பாக முக்­கிய நக­ரங்­களை குறி ­வைத்து ரஷ்ய படை­கள் குண்­டு­மழை பொழிந்து வரு­கின்­றன. ரஷ்­யா­, கொத்­துக்­ குண்டு­கள் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளால் தொடர்ந்து தாக்­கு­தலை நடத்தி வரு­கிறது. உக்ரேன் தலை­ந­கர் கியூ விமான நிலை­யத்­துக்­கும் அது குறி வைத்துள்ளது.

ரஷ்­யா­வின் தாக்­கு­த­லில் இருந்து தப்­பிக்க உக்­ரே­னில் மெட்ரோ ரயில் சுரங்­கப் பாதை­களில் மக்­கள் தஞ்சம் அடைந்­துள்­ள­னர்.

அதே சம­யத்­தில் ரஷ்­யா­வின் போர் விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­யுள்­ள­தாக உக்­ரேன் ராணு­வம் தெரி­வித்­தது. லுஹான்ஸ்க் நக­ரில் ரஷ்­யா­வின் ஐந்து போர் விமா­னங்­க­ளை­யும் ஒரு ஹெலி­காப்­ட­ரை­யும் வீழ்த்­தி­யுள்­ள­தாக அது கூறி­யது.

இந்த நிலை­யில் உக்­ரேன் மீதான போரை ரஷ்யா நிறுத்து வதற்கு உலக நாடு­கள் உதவ வேண்­டும் என்று உக்­ரேன் அரசு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இந்­தி­யா­வும் இந்த விவ­கா­ரத்­தில் தலை­யிட வேண்­டும் என்­றும் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னு­டன் இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி பேச வேண்­டும் என்­றும் இந்­தி­யா­வில் உள்ள உக்­ரேன் தூத­ர­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஐநா பாது­காப்பு சபை­யின் இந்­திய பிர­தி­நி­தி­யான டி.எஸ். திரு­மூர்த்தி, உக்­ரேன்- ரஷ்யா இடை­யி­லான பதற்­றம் கவ­லை­யைத் தரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

"தற்­போ­தைய சூழல் மிகப் பெரிய சிக்­க­லுக்கு வித்­தி­டும்," என்­றார் அவர்.

மற்­றொரு நில­வ­ரத்­தில் உக்­ரேன்-ரஷ்யா போர் குறித்து மூத்த அமைச்­சர்­கள், தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவ­லு­டன் பிர­த­மர் மோடி அவசர ஆலோ­சனை நடத்திய­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.