புதுடெல்லி: ஒரு பெண்ணிடம் 'ஐ லவ் யூ' என்று ஒரு முறை கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் மும்பையில் இளைஞர் ஒருவர் தங்களது மகளிடம் 'ஐ லவ் யூ' என்று கூறியதாக அவளது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கல்பனா பாட்டீல், 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று ஒருமுறை கூறுவது அன்பின் உணர்வை வெளிப்படுத்து வதாகத்தான் இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கில் இச்செயலைச் செய்ததாகக் கூற முடியாது.
"அந்தப் பெண்ணை தொடர்ச் சியாக, பின்தொடர்ந்து சென்று 'ஐ லவ் யூ' கூறியதாக வழக்குத் தொடரப் படவில்லை," என்று கூறி இளையரை வழக்கிலிருந்து விடுவித்தார்.

