500 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு

500 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு

1 mins read
6269a5c8-63ca-4376-ac4f-6a02686873c6
ஐநூறு ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை. படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

மெல்­பர்ன்: சுமார் 500 ஆண்­டு­கள் பழ­மை­யான ஆஞ்­ச­நே­யர் சிலை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மீட்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தச் சிலையை தமி­ழ­கத்­துக்­குக் கொண்டு வரும் முயற்­சி­களை சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு காவல்­து­றை­யி­னர் எடுத்து வரு­கின்­ற­னர்.

அரி­ய­லூர் மாவட்­டம் வேலூர் கிரா­மத்­தில் உள்ள வர­த­ராஜ பெரு­மாள் கோவி­லில் 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் அந்த ஆஞ்­ச­நே­யர் சிலையை மர்ம நபர்­கள் திரு­டிச் சென்­று­விட்­ட­னர்.

செந்­துறை காவல்­து­றை­யி­னர் இது தொடர்­பாக வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வந்­த­னர். இந்த நிைலயில் அரிய ஆஞ்­ச­நே­யர் சிலை கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கண்டு பிடிக்­கப்­பட்டு உள்­ளது.

இணை­யத்­த­ளம் வாயி­லாக இந்த சிலை­யின் இருப்­பி­டம் கண்டுபிடிக்­கப்­பட்­டது.

ஆஞ்­ச­நே­யர் சிலை அமெ­ரிக்­கா­விற்கு கடத்­தப்­பட்டு நியூ­யார்க் நக­ரில் 37,500 டால­ருக்கு ஏலம் விடப்­பட்­டது.

ஏலத்­தில் விற்­கப்­பட்ட இந்­தச் சிலையை ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த நபர் ஒரு­வர் தன்­வ­சம் வைத்­தி­ருந்­தார்.

அந்­தச் சிலை மீட்­கப்­பட்டு செவ்­வாய்க்­கி­ழமை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள இந்­திய தூத­ர­கத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்டது.

ஒரு மாதத்தில் ஆஞ்சநேயர் சிலை தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் என்று கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கலாசார அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, அமெரிக்க உள்துறை சிலையை மீட்டுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐநூறு ஆண்டு பழமையான வெண்கலச் சிலை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.