மேடையில் தோப்புக்கரணம் போட்ட பாஜக எம்எல்ஏ

மேடையில் தோப்புக்கரணம் போட்ட பாஜக எம்எல்ஏ

1 mins read
bcda6e81-1c50-43ad-b82c-afe1e3d36383
தோப்புக்கரணம் போட்ட பாஜக எம்எல்ஏ. காணொளிப் படம்: இந்திய ஊடகம் -

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் ஆளும் பாஜ­க­வைச் சேர்ந்த எம்­எல்ஏ ஒரு­வர் மேடை­யில் ஏறி மள­ம­ள­வென்று தோப்­புக் கர­ணம் போட்ட காெணாளி சமூக ஊட­கங்­களில் தீயா­கப் பரவி வரு­கிறது. ஆனால் கடும் கோபத்­தில் உள்ள மக்­களை ஏமாற்றி வாக்குகளைக் கவ­ரும் போலி நாட­கம் இது என்று காங்­கி­ரஸ் கட்சி கிண்­ட­ல­டித்­துள்­ளது.

பார­திய ஜனதா கட்­சி­யைச் சேர்ந்த பூபேஷ் செளபே, சோன்­பஹ்­தர் மாவட்­டத்­தில் உள்ள ராபர்ட்ஸ்­கஞ்ச் தொகு­தி­யி­லி­ருந்து சட்­ட­ச­பைக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்.

தற்­போது நடை­பெ­றும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இேத தொகு­தி­யில் இவர் மீண்­டும் போட்­டி­யி­டு­கி­றார். இவர், கடந்த ஐந்து வரு­ட­மாக கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் மக்­கள் அதி­ருப்­தி­யு­ட­னும் கோபத்­து­ட­னும் இருப்­பதை அறிந்து வித்­தி­யா­ச­மான பிர­சா­ரத்­தில் அவர் ஈடு­பட்டு வரு­கி­றார்.

தனது தொகு­தி­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஒரு பிர­சா­ரக் கூட்­டத்­தில் ேமடை­யில் இருந்த நாற்­கா­லி­யில் அமர்ந்­தி­ருந்த செளபே, திடீ­ரென எழுந்து நாற்­கா­லி­யில் ஏறி தோப்­புக்­க­ர­ணம் போட ஆரம்­பித்­தார்.

இது குறித்து பின்­னர் பேசிய செளபே, "கடந்த ஐந்து ஆண்­டு­களில் நான் கொடுத்த வாக்­கு­று­தி ­களை நிறை­வேற்­றா­விட்­டால், தவறு செய்­தி­ருந்­தால் தயவு செய்து என்னை மன்­னித்து விடுங்­கள். இத­னால்­தான் தோப்புக்கரணம் போட்­டேன்," என்று கூறி­யுள்­ளார்.

இவரது இந்தச் செயலை மக்­களை ஏமாற்­றும் நாட­கம்," என்று காங்­கி­ரஸ் கட்சி சாடி­யுள்­ளது.