தனிப்பெரும்பான்மை கிடைக்க யாருக்கும் வாய்ப்பில்லையாம்

தனிப்பெரும்பான்மை கிடைக்க யாருக்கும் வாய்ப்பில்லையாம்

1 mins read
4c15d7c4-401c-4fb0-b83b-cc7f9a9b96b9
-

2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 403 தொகுதி களில் பாஜக 312 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைத்தது. இதில் அக்கட்சிக்கு 39.7% வாக்குகள் கிடைத்தன. அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளுடன் 21.8% வாக்கு களும் மாயாவதியின் பிஎஸ்பி வெறும் 7 தொகுதிகளுடன் 22.2% வாக்குகளும் பெற்றி ருந்தன. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளுடன் 6.3% வாக்கு களைப் பெற்றது. தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் இனி நடைபெற இருக்கும் மூன்று கட்ட வாக்குப்பதிவில் பாஜக, சமாஜ்வாடி கட்சி ஆகிய வற்றின் வாக்குகள் பிரியும் சூழல் நிலவுவதால் தொங்கு சட்டமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் குறிப் பிட்டனர். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக் காத நிலை இருப்பதாக முதல் கட்ட வாக்குப்பதிவின்போது எழுந்த கருத்து வலுப்பெற்று

வருவதாக அவர்கள் கூறினர்.