உக்ரேனில் தற்போது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் அங்கு விமானங்கள் தரையிறங்க முடியாமல் அண்டை நாடான ருமேனியாவில் தரையிறங்கி உள்ளது ஏர் இந்திய விமானம்.
உக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியாவிலிருந்து இன்று (பிப்ரவரி 26) காலை புறப்பட்டது. அது ருமேனிய தலைநகர் புகாரெஸ்ட்டிற்குச் சென்றடைந்தது.
சாலை வழியாக உக்ரேன்-ருமேனிய எல்லைப்பகுதிக்கு பல இந்தியர்கள் வந்தடைந்துள்ளார்கள் என்றும் அவர்களை இந்திய அதிகாரிகள் புகாரெஸ்டுக்குக் கொண்டு செல்வார்கள் என்றும் அங்க்கிருந்து அவர்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஹங்கேரிக்கும் இந்தியா விமானங்களை அனுப்பி வைக்கப்போவதாகவும் அறியப்படுகிறது.

