இந்தியாமீது விண்வெளி நிலையம் விழக்கூடும்: ர‌ஷ்யா எச்சரிக்கை

இந்தியாமீது விண்வெளி நிலையம் விழக்கூடும்: ர‌ஷ்யா எச்சரிக்கை

1 mins read
360a5a91-355b-4d77-8915-e16e198e9dc5
-

மாஸ்கோ: ரஷ்யாமீது அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை­கள், அனைத்­துலக விண்­வெளி மையத்­திற்­கான ஒத்­து­ழைப்­பில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று ர‌ஷ்யா எச்­ச­ரித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக, 500 டன் எடை­கொண்ட அனைத்­து­லக விண்­வெளி மையம், இந்­தியா, சீனா மீது விழக்கூடும் என்று ர‌ஷ்ய விண்­வெளித்­துறைத் தலை­வர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

அனைத்­து­லக விண்­வெளி நிலை­யத்­தின் செயல்­பா­டு­களில் அமெ­ரிக்­கா­வும் ர‌ஷ்­யா­வும் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

அதன் இயக்­கத்­தைக் கண்­காணிப்­பது, விண்­வெளி மையம் பூமிக்கு மிக அரு­கில் வரா­மல் இருப்­பதை உறுதி செய்­வது உள்­ளிட்ட முக்­கிய பணி­களை ர‌ஷ்யா மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் ர‌ஷ்ய விண்­வெளித்­துறைத தலை­வர் டிமிட்ரி ரோகொ­சின் டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்ள பதி­வில், "அமெ­ரிக்க அதி­ப­ரின் புதிய பொரு­ளா­தார தடை­கள் ர‌ஷ்ய விண்­வெளி திட்­டங்­கள் உள்­பட விண்­வெ­ளித்­

துறை­யில் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும்.

"நீங்­கள் எங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு தர மறுத்­தால், 500 டன் எடை­கொண்ட விண்­வெளி மையத்­தின் பகுதி இந்­தியா, சீனா மீது விழ வாய்ப்பு உள்­ளது.

"அமெ­ரிக்கா அல்­லது ஐரோப்பா மீது சிறு பாகங்­க­ளாக விழக்­கூ­டிய அனைத்­து­லக விண்­வெளி நிலை­யத்தை யார் காப்­பாற்­று­வது?

"விண்­வெளி மையம் ர‌ஷ்­யா­வுக்கு மேல் பறக்­க­வில்லை. ஆகை­யால் அனைத்து ஆபத்­து­களும் உங்­க­ளுக்­குத்­தான். நீங்­கள் அதற்கு தயா­ராக இருக்­கி­றீர்­களா?" என்று கேட்டுள்ளார்.

உக்­ரேன் மீது ர‌ஷ்யா போர் தொடுத்­துள்­ள­தைத் தொடர்ந்து, அந்­நாட்­டின் மீது விண்­வெ­ளித் துறை உள்­ளிட்ட பல­து­றைகளுக்கு அமெ­ரிக்­கா­வும் ஐரோப்­பிய நாடு­களும் தடை விதித்துள்ளன.