தேர்தல் இலவசம்: ரொக்கத்தை மிஞ்சியது போதைப் பொருள்

தேர்தல் இலவசம்: ரொக்கத்தை மிஞ்சியது போதைப் பொருள்

1 mins read
6523ea02-b7d0-49ed-b46f-9d7f15900c92
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் ஐந்து மாநி­லங்­களில் நடந்து வரும் சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் வாக்­கா­ளர்­களை ஈர்ப்­ப­தற்­கான மிகப்­பெ­ரிய தூண்­டு­த­லாக போதைப்­பொ­ருள் உரு­வெ­டுத்­துள்­ளது.

உத்­த­ர­காண்ட், உத்­த­ரப் பிர­தே­சம், பஞ்­சாப், மணிப்­பூர், கோவா ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளுக்கு சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­று­கிறது.

தேர்­தல் சம­யத்­தில் இம்­மா­நி­லங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­களில் ரொக்­கம் உட்­பட கிட்­டத்­தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்­பு­டைய, வாக்­கா­ளர்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­ட­வி­ருந்த இல­வ­சப் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக தேர்­தல் ஆணை­யத்­தின் அறிக்கை கூறு­கிறது.

இது, 2017ஆம் ஆண்டு நடந்த தேர்­த­லில் கைப்­பற்­றப்­பட்ட 299.8 கோடி ரூபா­யை­விட மூன்று மடங்­கிற்கு மேல் அதி­க­மா­கும்.

இதில், கிட்­டத்­தட்ட 510 கோடி ரூபா­யு­டன் பஞ்­சாப் முத­லி­டத்­தி­லும் ரூ.307.92 கோடி­யு­டன் உத்­த­ரப் பிர­தே­சம் 2வது இடத்­தி­லும் 167.83 கோடி ரூபா­யு­டன் மணிப்­பூர் மூன்­றா­வது இடத்­தி­லும் உத்­த­ர­காண்ட், கோவா அடுத்­­த­டுத்த இடங்­க­ளி­லும் உள்­ளன.

இம்­மா­நி­லங்­களில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொருளின் மதிப்பு ஏறத்­தாழ ரூ.569.52 கோடி­யா­கும். அதற்கு அடுத்­த­ப­டி­யாக ரூ.140.29 கோடி ரொக்­கப் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இது இந்­தி­யா­வில் போதைப் பொருள் புழக்­கம் பெருமளவு அதி­க­ரித்துள்ளதைக் காட்­டு­வதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.