புதுடெல்லி: இந்தியாவில்
கடந்த 2 மாதங்களில் மட்டும்
27 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனஉயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய
அதன் தலைமை அதிகாரி, "புள்ளிவிவரங்களின்படி
2 நாள்களுக்கு ஒரு புலி இறந்துள்ளது. இது புலிகள் பாதுகாப்பின் மோசமான நிலைமையைக் காட்டுகிறது. பல்லுயிர் சூழலுக்கு புலிகளை பாதுகாப்பது அவசியம்," என்றார். அதிகபட்சமாக, மத்தியப் பிரதேசத்தில்
9 புலிகள் உயிரிழந்துவிட்டன.

