தூக்குப்படுக்கையில் வந்து வாக்களித்தார்

தூக்குப்படுக்கையில் வந்து வாக்களித்தார்

1 mins read
f1bccc04-845f-4973-8fda-a9bd0ff45e45
-

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் நேற்று ஐந்தாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இடம்பெற்றது. அதை ஒட்டி, பிரயாக்ராஜைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தூக்குப் படுக்கையில் வந்து வாக்கு செலுத்தினார். "அண்மையில் எனக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், எனது வாக்கை வீணாக்க விரும்பவில்லை," என்றார் அம்மூதாட்டி. ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலின் கடைசி இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் அடுத்த மாதம் 3ஆம் தேதியும் 7ஆம் தேதியும் இடம்பெறும். அதன்பின் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும்.