புதுடெல்லி: முனைவர் பட்டம் பெற்றுள்ளோர் எண்ணிக்கையிலும் அறிவியல் வெளியீடுகளிலும் இந்தியா உலக அளவில் மூன்றாமிடத்தில் இருப்பதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். முக்கியத் துறைகளில் புதிய, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ஏதுவாக, நாடு முழுவதும் 25 தொழில்நுட்பப் புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவற்றின்மூலம் 46 புதிய தொழில்நுட்பங்கள் உட்பட 496 தொழில்நுட்பத் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முனைவர் பட்டம்: இந்தியா மூன்றாமிடம்
1 mins read
-

