பெண்ணாக மாற முயன்றவர் பாலின மாற்று அறுவை சிகிச்சையின்போது பரிதாப மரணம்

விஜ­ய­வாடா: மருந்­தாக்­கத் துறை­யில் பயி­லும் மாண­வர்­க­ளைக் கொண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்­து­கொள்ள முயன்­ற­போது, கடு­மை­யான இரத்­தப்­போக்­கால் ஆந்­திர மாநி­லத்­தைச் சேர்ந்த ஆட­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

நெல்­லூர் நக­ரில் கடந்த வியா­ழ­னன்று இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. யூடி­யூப் காணொ­ளி­யைக் கண்டு அறுவை சிகிச்சை செய்த மாண­வர்­கள் இரு­வ­ரை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

கடந்த 2019ஆம் ஆண்­டில் மாமன் மகளை மண­மு­டித்த அந்த 28 வயது ஆட­வர், அதற்கு மறு­ஆண்டே மண­வி­லக்­கு பெற்று, தனி­யாக வாழ்ந்து வந்­தார்.

இந்­நி­லை­யில், விசா­கப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த திரு­நங்கை ஒரு­வர் அவ­ருக்­குப் பழக்­க­மா­னார். அதன்­பின், வாட்ஸ்­அப் வாயி­லாக மஸ்­தான், ஜீவா என்ற இள­நிலை மருந்­தாக்­கப் படிப்பு பயி­லும் மாண­வர்­களு­டன் அவர்­க­ளுக்­குப் பழக்­கம் ஏற்­பட்­டது.

அவர்­க­ளி­டம் தான் மும்பை சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்­து­கொள்ள விரும்பு­வதாக அந்த ஆட­வர் தெரி­வித்­தார். அத­னைக் கேட்ட அம்­மா­ண­வர்­கள் இரு­வ­ரும் 'தங்­க­ளுக்கு அந்த அறுவை சிகிச்சை முறை தெரி­யும்' என்று கூறி­னர்.

இத­னைத் தொடர்ந்து, நெல்­லூ­ரில் ஒரு ஹோட்­டல் அறையை வாட­கைக்கு எடுத்து, அங்கு அவர்­கள் அறுவை சிகிச்சை மேற்­கொண்­ட­தா­கக் காவல்­துறை கூறி­யது. அப்­போது, மயக்க மருந்து அதி­க­மா­கக் கொடுத்­ததா­லும் மிகுதி­யான இரத்­தப்­போக்­கா­லும் அந்த ஆட­வர் அந்த அறை­யி­லேயே இறந்து­விட்டார். அதைக் கண்­ட­தும் அம்­மா­ண­வர்­கள் இரு­வ­ரும் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­னர்.

பின்­னர் ஹோட்­டல் ஊழி­யர் ஒரு­வர் அந்த ஆட­வ­ரின் சட­லத்­தைக் கண்டு தக­வல் கொடுத்­த­தை­ய­டுத்து, சம்­ப­வம் வெளிச்­சத்­திற்கு வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!