12 இந்திய மாணவர்கள் தடுத்து வைப்பு

12 இந்திய மாணவர்கள் தடுத்து வைப்பு

2 mins read
489f570f-dc2a-4e3a-bf20-e86e3bf5a325
-

ஹைத­ரா­பாத்: உக்­ரே­னில் நிலைமை மோச­ம­டைந்து வரும் நிலை­யில், அங்­கி­ருந்து வெளி­யேற முற்­பட்ட ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த 12 மாண­வர்­கள் அந்­நாட்­டின் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உக்­ரே­னின் அண்டை நாடான ருமே­னியா­வுக்­குள் தரை­வழி நுழை­யும் திட்­டத்­து­டன் சென்ற அந்த மாண­வர்­க­ளைத் தடுத்து நிறுத்­திய பாது­காப்­புப் படை­யி­னர், தங்­க­ளி­டம் இருந்த பற்று அட்­டை­களைப் பறித்­துக்கொண்­ட­தா­க­வும் அம்­மாண­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

போலந்து, ருமே­னியா நாடு­க­ளின் எல்­லைப் பகு­தி­களில் நிலைமை மோச­ம­டைந்து வரு­கிறது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஹைதரா­பாத்­தைச் சேர்ந்த, மருத்­து­வம் படிக்­கும் எட்டு மாண­வர்­கள் உக்­ரேன், போலந்து எல்­லைப் பகு­தியை அடைந்த நிலை­யில், அவர்­கள் மீது பாது­காப்­புப் படை­யி­னர் லேசான தடி­யடி நடத்தி, மீண்­டும் உக்­ரே­னுக்கு திரும்­பிச் செல்ல வைத்­த­தா­கத் தெரி­கிறது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய குணால் என்ற மாண­வ­ரின் தந்­தை­யான விஸ்­வ­நாத், தன் மகன் எம்­பி­பி­எஸ் மருத்­து­வப் படிப்பை மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் உறுதி செய்­தார்.

தக­வல் தொடர்­பில் இடை­யூறு ஏற்­பட்­ட­தன் கார­ண­மாக ஞாயிற்­றுக்­கி­ழமை முழு­வ­தும் தன் மக­னைத் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்­றார் அவர்.

"ருமே­னிய எல்­லை­யைச் சென்­ற­டைந்­து­விட்­டால் அங்­கி­ருந்து விமா­னம் மூலம் நாடு திரும்­ப­லாம் என்று திட்­ட­மிட்டு, என் மகன் உட்­பட 12 மாண­வர்­கள் அங்கு சென்­றுள்­ள­னர்.

"ஆனால் ருமே­னிய எல்­லை­யைச் சென்­ற­டைய ஐந்து கிலோ மீட்­டர் தூரம் மட்­டுமே இருந்த நிலை­யில், பாது­காப்­புப் படை­யி­ன­ரால் 12 பேரும் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளு­டைய கைபே­சி­கள் இயங்­க­வில்லை.

"பின்­னர் என்­னைத் தொடர்பு­கொண்டு பேசிய என் மகன், சுமார் முப்­பது கிலோ மீட்­டர் தூரம் நடந்து வந்­த­தா­க­வும் தற்­போது அனை­வ­ரும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

"ருமே­னிய எல்­லைக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­றும் கூறி­னார்," என்று விஸ்­வ­நா­தன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, 12 மாண­வர்­க­ளி­டம் இருந்து பற்று அட்­டை­களை பாது­காப்­புப் படை­யி­னர் பறித்­துக் கொண்­ட­தா­க­வும் எல்­லை­யைக் கடந்து செல்ல அதி­கா­ரி­க­ளி­டம் அனு­மதி பெறு­மாறு கூறி­ய­தா­க­வும் மாண­வர் குணால் தெரி­வித்தார்.

தங்­க­ளுக்கு உதவி செய்ய இந்தியத் தூத­ரக அதி­கா­ரி­கள் யாரும் இல்லை என்­றும் அவர் கூறி­யுள்ளார்.