விபத்து இழப்பீடு எட்டு மடங்கு அதிகரிப்பு

2 mins read
802f1e44-c9c6-46bf-bbcb-4e0a999e77b9
-

புது­டெல்லி: விபத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டு நிற்­கா­மல் செல்­லும் சம்­ப­வங்­களில் உயி­ரி­ழப்­போர் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­படும் இழப்­பீட்­டுத் தொகை எட்டு மடங்­காக உயர்த்­தப்­படும் என மத்­திய நெடுஞ்­சாலை, சாலைப் போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தற்­போது உயி­ரி­ழப்­போர் குடும்­பங்­க­ளுக்கு ரூ.25 ஆயி­ரம் வழங்­கப்­படும் நிலை­யில், அது ரூ.2 லட்­ச­மாக அதி­க­ரிக்­கப்­படும்.

மேலும், விபத்­தில் படு­கா­யம் அடைந்­த­வர்­க­ளுக்­கான தொகை ரூ.12,500ல் இருந்து ரூ.50 ஆயி­ர­மாக வழங்­கப்­படும் என்­றும் அந்த அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்த அறி­விப்பு எதிர்­வ­ரும் ஏப்­ரல் 1ம் தேதி­யில் இருந்து அம­லுக்கு வரு­கிறது.

இதன் மூலம் கடந்த 1989 முதல் இது­நாள் வரை வழங்­கப்­பட்ட விபத்து சார்ந்த நிவா­ர­ணத் தொகை­கள் மாறும் என்று சாலைப் போக்­கு­வ­ரத்து அமைச்சு செய்­திக்­கு­றிப்பு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், இழப்­பீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான தொகையை விடு­விக்­கும் நடை­மு­றைக்­கும் காலக்­கெடு வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நடை­மு­றை­யைச் செயல்­ப­டுத்த தேவைப்­படும் நிதி­யும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் விபத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டு நிற்­கா­மல் செல்­லும் சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்­க­வும் இழப்­பீடு வழங்­க­வும் இந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும்.

தவிர சாலை விபத்­து­கள் குறித்த விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கான நடை­மு­றையை மத்­திய சாலைப் போக்­கு­வ­ரத்து, நெடுஞ்­சாலை அமைச்சு வகுத்­துள்­ள­தா­க­வும் இதன் மூலம் இழப்­பீ­டு­கள் விரை­வாக வழங்­கப்­படும் என்­றும் அந்த அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு விபத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டு நிற்­கா­மல் செல்­லும் சம்­ப­வங்­களில் 536 பேர் பலி­யா­கி­விட்­ட­னர் என்­றும் 1,635 பேர் படு­கா­யம் அடைந்­த­னர் என்­றும் மத்­திய சாலைப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் நிதின் கட்­காரி தெரி­வித்­துள்­ளார்.

மேலும், கடந்த 2020ம் ஆண்­டில் நாடு முழு­வ­தும் மொத்­தம் 366,138 சாலை விபத்­து­கள் நிகழ்ந்­த­தா­க­வும் 131,714 பேர் பலி­யா­ன­தா­க­வும் அவர் மாநி­லங்­க­ள­வை­யில் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் ஆண்­டு­தோ­றும் சாலை விபத்­து­கள், அவற்­றில் உயிரிழப்­போர் எண்­ணிக்கை அதிக அளவில் பதிவாகி வரு­கிறது.

இந்­நி­லை­யில், விபத்­தால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் இழப்­பீ­டு­கள் குறை­வாக இருப்­ப­தா­க­வும் அவை உரிய நேரத்­தில் கிடைப்­ப­தில்லை என்­றும் புகார்­கள் எழுந்­துள்­ளன.