புதுடெல்லி: உக்ரேனிலிருந்து மூன்று விமானங்கள் மூலம் மேலும் 630 இந்தியர்கள் தாய் நாடு திரும்பி உள்ளனர்.
'ஆபரேஷன் கங்கா' எனும் இந்தியர் மீட்புத் திட்டத்தின் கீழ் வியாழன் இரவு முதல் நேற்று காலை வரை 'ஐஏஎஃப் சி-17' மூன்று விமானப் படை விமானங்களில் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள ஹின்டன் விமானப் படைத் தளத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
ருமேனியா, ஹங்கேரியில் உள்ள தளங்களைப் பயன்படுத்தி உக்ரேன் போரில் பாதிக்கப்பட்ட மொத்தம் 630 குடிமக்கள் மூன்று விமானங்களில் அழைத்து வரப்பட்டதாக டுவிட்டர் பதிவில் இந்திய விமானப் படை கூறியது.
மத்திய அமைச்சர் வி.கே. சிங், கடந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் ஏறக்குறைய 200 பேருடன் ஏழு விமானங்கள் இந்தியா வந்துள்ளதாகக் கூறினார்.
சில மாணவர்கள் போலந்து தலைநகர் வார்சா வந்து சேர்ந்து உள்ளனர்.
அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் சிவில் விமானப் போக்கு வரத்து துணை அமைச்சருமான வி.கே. சிங் தெரிவித்தார்.
இதுவரை சுமார் 9,000 இந்தி யர்கள் உக்ரேனிலிருந்து இந்தியா வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் காயம்
உக்ரேன் தலைநகர் கியவ்வில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கியவ் நகரிலிருந்து வெளிேயறியபோது ஹர்ஜோத் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் உடனடி யாக கியவ் நகர மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதாகவும் இளையர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கெனவே கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் போரில் உயிரிழந் தார். இந்நிலையில் மற்றொரு மாணவர் காயம் அைடந்துள்ளார்.

