'உக்ரேன் போரில் உயிர் தப்பியது அதிசயம்'

'உக்ரேன் போரில் உயிர் தப்பியது அதிசயம்'

2 mins read
72b8d754-ef57-4207-9dd0-cafc8ed710b6
-

ஊர் திரும்பியோர் நிம்மதிப் பெருமூச்சு

புது­டெல்லி: போர் நடந்­து­கொண்­டு இ­ருக்­கும் உக்­ரே­னில் தப்­பிப் பிழைத்­தது அதி­ச­யம்­தான் என்­றும் இப்­போது நிம்­ம­தி­யாக உணர்­கிறோம் என்­றும் அந்­நாட்­டின் சுமி நக­ரில் இருந்து நேற்­றுக் காலை புது­டெல்லி திரும்­பிய இந்­திய மாண­வர்­கள் தங்­க­ளது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

சுமி அர­சுப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆறாம் ஆண்டு மருத்­து­வக் கல்வி பயின்று வந்த தீரஜ் குமார் எனும் மாண­வர், தம்­மு­டைய பெற்­றோரை மீண்­டும் காண முடிந்­த­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­வ­தா­கக் கூறி­னார்.

"சுமி­யில் எதிர்­பா­ராத பல சவால்­களை எதிர்­கொண்­டோம். போருக்கு நடு­வில், கடந்த 13 நாள்­க­ளாக உயிர் பிழைத்­தி­ருந்­தது பயங்­க­ர­மான அனு­ப­வம். சொந்த நாட்­டிற்­குத் திரும்­பி­யது ஏதோ அதி­ச­யம்­போல் இருக்­கிறது," என்­றார் இமாச்­ச­லப் பிர­தேச மாநி­லத்­தைச் சேர்ந்த தீரஜ்.

தாங்­கள் பாது­காப்­பாக வெளி­யேறி, நாடு திரும்ப முடிந்­த­தற்­காக இந்­திய அர­சாங்­கத்­திற்­கும் உக்­ரேன், போலந்து நாடு­களில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கங்­க­ளுக்­கும் அவர் நன்றி தெரி­வித்­தார்.

ஒவ்­வொ­ரு­முறை அபா­யச்­சங்கு ஒலித்­த­போ­தும் தாங்­கள் பதுங்­கு­கு­ழி­க­ளுக்கு ஓட வேண்டி இருந்­த­தா­கச் சொன்­னார் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் முசா­ஃபர்­ந­க­ரைச் சேர்ந்த மகிமா ரதி எனும் மாணவி.

போலந்­தின் ஜெஸூஃப் நக­ரில் இருந்து 240 மாண­வர்­க­ளு­டன் நேற்று முன்­தி­னம் இரவு இந்­திய நேரப்­படி 11.30 மணி­ய­ள­வில் புறப்­பட்ட ஏர் இந்­தியா விமா­னம், நேற்­றுக் காலை 5.45 மணிக்­குப் புது­டெல்­லி­யில் தரை­யி­றங்­கி­யது.

சுமி நக­ரிலிருந்து கடை­சி­யாக வெளி­யேற்­றப்­பட்ட 600 மாண­வர்­களை மீட்க இந்­தியா மூன்று விமா­னங்­களை போலந்­துக்கு அனுப்­பி­யது. உக்­ரே­னில் சிக்­கிய இந்­தி­யர்­களை மீட்­க 'ஆப­ரே­ஷன் கங்கா' எனும் பெய­ரில் இந்­திய அரசு சிறப்பு விமா­னங்­களை இயக்கி வரு­கிறது.