தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த ஆம் ஆத்மி தீவிரம்

தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த ஆம் ஆத்மி தீவிரம்

1 mins read
e67f843b-7718-4167-8c4a-8814fd19e0e2
-

புதுடெல்லி: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் தென்மாநிலங்களில் தன் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய அக்கட்சி யின் மூத்த உறுப்பினர் சோம்நான் பாரதி, "பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு, தென் மாநில மக்கள் ஆம் ஆத்மியின் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

கெஜ்ரிவாலின் பணி, அா்ப் பணிப்புகளால் கவரப்பட்ட மக்கள், வெறுப்பு அரசியலை விட்டுவிலக முன் வந்துள்ளனா்.

"இதனால், இந்த தென்மாநிலங் களில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

"ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கா்நாடகா, அந்தமான்-நிக்கோபாா், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங் களில் இந்தப் பணி தொடங்கும்.

"மேலும் ஒவ்வொரு சட்டப் பேரவையையும் குறிவைத்து தொகுதி வாரியாக பிரம்மாண்ட பாதயாத்திரைக்கும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

"முதல் பாதயாத்திரையை தெலுங்கானாவில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

"இந்தப் பாதயாத்திரை மூலம் கெஜ்ரிவாலின் அரசியலையும் அம்பேத்கா், பகத் சிங்கின் கொள் கைகளையும் இந்தப் பகுதியில் உள்ளவா்களிடம் எடுத்துச் செல்ல ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

"இம்மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துகிறோம்," என்று அவர் சொன்னார்.