மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகப்படுத்துமாறு இந்தியாவிடம் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பதில் நட வடிக்கையாக, அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பெரும் பொருளியல் தடைகளை விதித்து உள்ளன.
1991ல் சோவியத் ஒன்றியம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யப் பொருளியலுக்கு ஆகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாட்டின் பொரு ளியல், குறிப்பாக எண்ணெய்த் துறை அடிவாங்காமல் இருக்க இந்தியாவின் பக்கம் ரஷ்யாவின் கவனம் திரும்பியுள்ளது.
இதற்கிடையே, உக்ரேனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை களுக்குக் கண்டனம் தெரிவிக்கு மாறு மேற்கத்திய கூட்டணி நாடுகள் இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யத் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் வெளியிட்ட அறிக்கை ஒன்றை, இந்தியாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் வெள்ளிக்கிழமை இரவு பகிர்ந்தது.
"இந்தியாவுக்கு ரஷ்யாவின் எண்ணெய், பெட்ரோலிய ஏற்றுமதி கள் அமெரிக்க டாலர்
$1 பில்லியனை (S$1.36 பி.) எட்டியுள்ளன.
"இந்தத் தொகையை அதிகரிப்ப தற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று நோவாக் கூறினார்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி களுக்கு அமெரிக்கா இந்த வாரம் தடை விதித்தது. அவற்றைப் பெறு வதை ஆண்டிறுதிக்குள் நிறுத்திக் கொள்ளப்போவதாக பிரிட்டனும் கூறியுள்ளது.
இது, உலகளாவிய எரிசக்திச் சந்தைக்குப் பெரும் பாதிப்பை ஏற் படுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது.

