நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த குடிசைகள்; ஏழு பேர் பலி

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த குடிசைகள்; ஏழு பேர் பலி

1 mins read
718aa03e-08f7-47af-98b5-f628a8380d78
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் டெல்லியின் கோகுல்புரி பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. படம்: இணையம் -

புதுடெல்லி: டெல்லி கோகுல்புரி குடிசைப் பகுதியில் சனிக்கிழமை பின்னிரவு 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

இந்தச் சம்பவம் குறித்து வடகிழக்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் தேவேஷ் குமார் கூறுகையில், "அதிகாலை ஒரு மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே கோகுல்புரி பகுதிக்கு தீயணைப்பு வாகனங் களுடன் சென்றோம்.

"அங்கு சென்ற பின்னர்தான் விபத்தின் வீரியம் புரிந்தது. உடனடியாக கூடுதல் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. 13 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. அதிகாலை 4 மணியளவில் தான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது," என்றார்.

இந்த விபத்து குறித்த சேதங்களைக் கண்டறிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

அப்போது, பாதிக்கப்பட்டவர் களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது அதிக வருத்தம் அளிக்கும் சம்பவம். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

"உயிரிழந்தோரின் குடும்பத்தி னருக்கு ரூ.10 லட்சமும் காயமடைந் தோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

"காயமடைந்தோரின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும்," என்று கூறினார்.