செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4c1b4fc0-6fc6-40b8-9e58-58ebda109285
-

கறிவேப்பிலை விலை உயர்வு

பெங்களூரு: கறிவேப்பிலை விளைச்சல் குறைந்ததால், சந்தைகளில் அதன் விலை அதிகரித்துள்ளளது. பெங்களூரு சந்தைகளில் சில நாட்களுக்கு முன் 1 கிலோ கறிவேப்பிலை விலை 60 ரூபாயாக இருந்தது. இப்போது அதன் விலை

160 முதல் 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற கீரைகளுடன் ஒப்பிட்டால், கறிவேப்பிலை விலை மட்டுமே அதிகரித்துள்ளது. ஒரு கொத்து கறிவேப்பிலை 5 முதல் 10 ரூபாயாக அதிகரித்துள்ளது. இம்மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்முவில் பயங்கரவாதிகள் கொலை

ஜம்மு காஷ்மீரில் மூன்று வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் பயங்கரவாதிகள் நால்வர் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம் சேவாக்லான் எனுமிடத்திலும் கந்தர்பல் மாவட்டம் செர்ச் பகுதியிலும் ஹண்டுவாராவில் நெச்சமா பகுதியிலும் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது, ல‌ஷ்கர் இ தொய்பா இயக்கங்களைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ரோஜாவுக்கு அமைச்சர் வாய்ப்பு

ரோஜாவை வாழ்த்திய முதலவர் ஜெகன் மோகன்.

கோப்புப் படம்

திருப்பதி: ஆந்திர சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன் மோகன் (படம்) முன்னிலையில் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு பேசிய ஜெகன் மோகன், "விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும். இதில், அமைச்சர் பதவிகள் பறிபோனால் அதற்காக யாரும் வருத்தப்படகூடாது," என்று அறிவித்தார்.

ஜெகன் மோகன் ஆட்சி பொறுப்பேற்றதுமே, அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்றும் அதன் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இதனிடையே, ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் மாவட்டங்களும் 13லிருந்து 26ஆக பிரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அமைச்சர் கட்டாயமாக இடம் பெறுவார் என கூறப்படுகிறது. அதன்படி, சித்தூர் மாவட்டத்தில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.