97% காங்கிரஸ் வேட்பாளர்கள் வைப்புத்தொகை இழந்தனர்

97% காங்கிரஸ் வேட்பாளர்கள் வைப்புத்தொகை இழந்தனர்

1 mins read
e2e784f9-abf3-45aa-b426-743265d51904
-

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அந்த மாநிலத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தாலும் கூட, உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்ட 399 காங்கிரஸ் வேட்பாளர்களில் 387 பேருக்கு (97%) வைப்புத்தொகைகூட கிடைக்கவில்லையாம்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெறும்

2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த கட்சிக்கு கிடைத்த வாக்கு விகிதம் 2.4 விழுக்காடு மட்டுமே.

இது, ராஷ்டிரிய லோக் தள கட்சி பெற்ற வாக்குகளை விடவும் மிகவும் குறைவு. வெறும் 33 தொகு திகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் தளம் 2.9 விழுக்காடு வாக்கு களைப் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் மட்டுமல்ல, 403 தொகுதிகளிலும் போட்டியிட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட் பாளர்களில் 290 பேருக்கும்கூட (72%) வைப்புத்தொகை கிடைக்க வில்லை. பாஜகவில் மூன்று வேட் பாளர்களுக்கு இதே நிலைமைதான்.

ஒட்டுமொத்தமாக, உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்ட 4,442 வேட்பாளர்களில் 3,522 பேருக்கு (80%) வைப்புத்தொகை கிடைக்க வில்லை என்பது இன்னொரு சுவார சியமான வி‌ஷயமாகும்.