புதுடெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவு கணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்து உள்ளது.
இந்தியா சார்பில் கடந்த புதன் கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந் ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா, பாகிஸ்தான் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மூத்த தளபதி பாபர் இப்திகார் தெரிவித்து இருந்தார்.
வழக்கமான சோதனை நடவ டிக்கையின் போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த தாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அளித்துள்ள விளக் கத்தில், "பாகிஸ்தான் பகுதிக்குள் ஏவுகணை தரையிறங்கியது கவ னத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் மிகவும் வருத்தத் திற்குரியது.
"இதுபற்றி உயர்மட்ட விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரண மாக தவறுதலாக ஏவுகணை பாகிஸ் தானுக்குள் சென்றுவிட்டது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

